என் பெரும்பாலான கவிதைகளில்
உன் சாயல் இருக்கும்…
உன் புன்னகை இருக்கும்…
நீ அறியாமலே செய்த
அந்தச் சின்னச் சின்ன அங்க அசைவுகள் இருக்கும்…
ஏனெனில்…
என் மனம்
புதிய கவிதை வரிகளைத் தேடும்போதெல்லாம்,
முதலில் தேடுவது
உன்னைத்தான்…
என் அன்பை
வார்த்தைகளில் விதைக்க நினைக்கும்
ஒவ்வொரு சிறிய முயற்சியிலும்,
என் எல்லா கவிதைகளின்
முதல் வரியும் நீதான்…
எழுதி முடிக்க முடியாத
முடிவில்லா அத்தியாயமும்
நீதான்…