icon.png

FOR HIM

HD-wallpaper-sad-love-love-failure-man-thumbnail-1.jpg

icon.png

LOVE POEMS – TAMIL / ENGLISH



என் காதல் உள்ளது உயிரோடு !!

உன் கண்களை மறைத்தபடி பேசும் போதெல்லாம்,
உன் இதயத்தின் மொழியையே நான் இழந்துவிடுகிறேன்..

என் நிலவே…
உன் விரல்கள் தீண்டாத இடங்களைத்
உன் கண்கள் தான் தீண்டி,
என் பெண்மையை நெகிழச் செய்கின்றன.

அதை உணர்ந்து, இனி
உன் கண்களால் பேச கற்றுக்கொள்…
ஏனெனில் அங்கே தான் என் காதல் உள்ளது உயிரோடு..



மீண்டும் காதலிக்கிறேன் !!

ஒவ்வொரு புகைப்படத்திலும் உன் சிரிப்பு என் இதயத்தை காதலிக்கிறது.

உன் ஒவ்வொரு பார்வையும்  என்னை மீண்டும் மீண்டும் உன்னையே காதலிக்க வைக்கிறது..



என் விருப்பமான பிரச்சினை !!

டாம் & ஜெரியில் போல நாம் சண்டை போட்டாலும்,
நாள் முடிவில்
நான் தேர்வு செய்வது உன்னைத்தான்.

என் ட்ராமாக்களைத் தாங்கிக்கொண்டு,
என்னை சிரிக்க வைக்கும்
ஒரே ஒருவன் நீ தானே…

ஆம்…
நான் உன் விருப்பமான பிரச்சினை தான்.
சண்டையிலும் கூட,
உன்னுடையதாக இருப்பதை
நான் ரகசியமாக ரசிக்கிறேன்.

நான் உன் ட்ராமா குயின்,
நீ என் அமைதியான கிங் —
இப்படியே நம் இதயங்களை
நாம் ஆள்கிறோம்.



Speak to Me With Your Eyes !!

When you speak with your eyes hidden,
I lose the language of your heart..

 My moon,

Places your fingers have never touched,your eyes alone caress,melting the woman in me.

So understand this and learn to speak with your eyes from now on…

Because it is there that my love lives — alive and breathing.



Falling for You Again !!

In every photograph, your
smile falls in love with my heart.

Every single glance of yours makes me fall in love with you again and again.



My Favorite Kind of Trouble !!

 

 

Even if we fight like Tom & Jerry,
at the end of the day, I’ll still choose you.

Because you’re the only one
who can handle my drama,
and still make me smile.

Yes… I am your favorite kind of trouble.

Even in our fights,
I secretly enjoy being yours.

I am your drama queen,
and you are my silent king —
and somehow, we rule each other’s hearts.



காதலின் உச்சம் !!

நம் காதலின் உச்சம்,
என் வீட்டு சோபாவில் தான் மலர்கிறது —
ஆம்.. என் கனவில்.!

இப்போது என்ன செய்வது?
சோபாவுக்கு பூ அலங்காரம் செய்பவரை
எங்கே நான் தேடுவது?

நம் முதல் பகலை இவ்வளவு கனவுப் பிரபஞ்சமாக,
இவ்வளவு சிக்கலாக்கி விட்டோமோ?



GDP முக்கியம், என் காதலா !!

மீன் உற்பத்தி — நீல பொருளாதாரத்தின் இதயமாம்.

ஆனால், அதை ஒரு சதவீதம்கூட யோசிக்காமல்
ஆற்றில் குளிக்கலாம் என்று என்னை அழைக்காதே.

பின்பு கொதிக்கும் அந்த ஆற்றில்
அனைத்து மீன்களும் வெந்து மிதக்கும்…

GDP முக்கியம், என் காதலா.. 



கொஞ்சம் மீட்டுக்கொடு !!

தயவு செய்து இன்னும் கொஞ்சம் அதிகமாக என்னை காதலி…

கவிதை கடனில் நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.

என்னை கொஞ்சம் மீட்டுக்கொடு..



Peak of our Love !!

The peak of our love
always blooms on my home’s sofa —
Yes… only in my dreams!
Now tell me, what do I do?
Where do I find someone
to deck that sofa with flowers?
We’ve turned our first day
into such a dreamy universe,
and made it all so complicated…



GDP matters, my love !!

 

Fish production — they say it’s the heart of the blue economy.

But don’t you dare invite me for a river bath
without thinking even a little about it.

When the river starts to boil,
all the fishes will float up, cooked and done…

GDP matters, my love



Drowning in debts of poetry !!

 

 

 

Please… love me a little more,

I’m drowning in debts of poetry.

Pull me out — just a little.. 



கொஞ்சம் பரிதாபமாய்த்தான் இருக்கிறது !!

எனக்கு அழகாக சிரிக்கத் தெரியாது

கோபத்தை மறைத்து நடிக்கத்  தெரியாது

காதலை சரியாக வெளிப்படுத்த தெரியாது

உண்மையை சொன்னால்,

உதடுகளில் அழுந்த முத்தமிட தெரியாது

எப்படி இப்படி ஒரு மக்கு சிலைக்கு உயிர் கொடுக்க போகிறாய்?

கொஞ்சம் பரிதாபமாய்த்தான் இருக்கிறது, உன்னைப் பார்க்கும் போது…



என் வெள்ளை முயல் குட்டி நீ !!

இறந்ததை உயிர்ப்பிக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஏதும் கொண்டவனா நீ?

என் மனதுக்குள் பல காலம் இறந்து புதைந்து கிடந்த காதலுக்கு உயிர் கொடுத்து எழுப்பி விட்டாயே..

Black magic தெரிந்த என் வெள்ளை முயல் குட்டி நீ.

 



தலைசிறந்த வர்த்தகர் நீ !!

காதல் சந்தையில் நீ ஒரு தலைசிறந்த வர்த்தகர்.

நான் உன் காதலை கடனாக கேட்டேன்.. ஆனால் நீயோ பேரம் பேசி என்னை முழுவதுமாக வாங்கி விட்டாய்..

கடைசியாக இரண்டு பொக்கிஷங்களும் நமக்குள் பரிமாறப்பட்டது..

நான் இப்போது உன்னுடையவள். உன் இதயம் என்னுடையது..



Your Charm vs Caffeine !!

Your charm hits harder than caffeine.

 

One glance and I’m wide awake for the day.

 

Forget coffee..

 

You’re the reason, my heart brews nonstop.



Heartbeat !!

Our love is my favorite song..

When the world goes quiet,

your heartbeat becomes my music..



Missing you !!

Missing you silently hurts

more than words can say..

Some pains are meant 

to be felt,not spoken..



You made my life beautiful !!

Do you think I am asking you for beauty tips irrelevant?

 

Because,

 

You have made my life beautiful.

 

Won’t you make me beautiful?

 

That’s why…



கண் பட்டு விடப் போகிறது !!

என்னை அருகினில் வரச் சொல்லும் போதெல்லாம் நீ என் கண்களில் துப்பறிய வர சொல்கிறாயோ என்ற பயத்தில் என் கண்களின் இமைச் சிப்பிகள் முக்கால் பாகம் மூடி விடுகிறது.

பின்னே? என் கருவிழிச் சிப்பிக்குள் ஒளிந்து, ஒளிர்ந்து கொண்டிருப்பது என் செம்பவள முத்தான நீயல்லவோ?

 

நெருங்கி வரச் செய்து என் கண்களை நெருக்கத்தில் பார்த்து விடாதே. உனக்கே உன்னால் கண் பட்டு விடப் போகிறது.



இன்னும் நான் உன்னை நம்புகிறேன் !!

இன்னும் நான் உன்னை நம்புகிறேன்..

என்றாவது ஒரு நாள், எங்காவது ஒரு தருணத்தில் உன்னைச் சுற்றி அலைந்து திரியும் என் ஆவியின் கரம் பற்றி “பேசாமல் இவளைக் காதலித்திருக்கலாமோ” என்று பெருமூச்சு விட்டபடி யோசிப்பாய் என இன்னும் நான் உன்னை நம்புகிறேன்..

 



சூரிய ஒளி கொண்ட முகம் !!

வெறும் கைகளால் சூரியனை மறைக்க முடியாது என்பதை உன்னால் தான் தெரிந்து கொண்டேன்.

நன்றி.

நீ சிரிக்கும் போது கைகளால் உன் முகத்தை மூடியதற்கு..



Captivation by your own reflection !!

Every time you ask me to come closer,

My eyelids close three-quarters like an oyster,

Because of fearing you will detect my eyes.

 

Isn’t it you only, my pearl, who hides and shines within the pupil of my eye?

Don’t make me come closer and examine my eyes closely.

 

You yourself will be captivated by your own reflection.



Sparkling smile !!

Without your smile with sparkling white teeth by my side,

How can my life have a bright future?



My glamorous king !!

Even though I am not your queen,

 

You are my glamorous king..



Sun ‘s radiance face you have !!

It was only because of you that I learned that the sun’s radiance cannot be covered with bare hands..

 

 

Thank you for covering your face with your hands when you laugh….