உன்னை
காதலித்துக் கொண்டிருந்த நாட்களில் வெட்கத்தை மறைப்பதற்கு நடித்துக் கொண்டிருந்தேன்.
இப்போது வேதனையை மறைப்பதற்கு நடிக்க வேண்டியதாய் இருக்கிறது, மற்றவர்கள் முன்பு..
என்னை காதலியாய் மாற்றினாயோ இல்லையோ, நல்ல ஒரு கைதேர்ந்த நடிகையாக்கி விட்டாய்..
உன்னை காதலித்த நாட்களில்…
என் வெட்கத்தை மறைக்க… நடிக்கக் கற்றுக்கொண்டேன்.
உன்னைக் காணாத இந்நாட்களில்,
வேதனையை மறைக்க… நடிக்க வேண்டியதாய் இருக்கிறது,
மற்றவர்கள் முன்பு சிரிக்கிறேன்… உள்ளுக்குள்
சிதறிக்கொண்டே.
மொத்தத்தில் என்னை காதலியாய் மாற்றினாயோ இல்லையோ, நல்ல ஒரு கைதேர்ந்த நடிகையாக்கி விட்டாய்..