Where words find their wings


எனக்கு அழகாக சிரிக்கத் தெரியாது
கோபத்தை மறைத்து நடிக்கத் தெரியாது
காதலை சரியாக வெளிப்படுத்த தெரியாது
உண்மையை சொன்னால்,
உதடுகளில் அழுந்த முத்தமிட தெரியாது
எப்படி இப்படி ஒரு மக்கு சிலைக்கு உயிர் கொடுக்க போகிறாய்?
கொஞ்சம் பரிதாபமாய்த்தான் இருக்கிறது, உன்னைப் பார்க்கும் போது...
இறந்ததை உயிர்ப்பிக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஏதும் கொண்டவனா நீ?
என் மனதுக்குள் பல காலம் இறந்து புதைந்து கிடந்த காதலுக்கு உயிர் கொடுத்து எழுப்பி விட்டாயே..
Black magic தெரிந்த என் வெள்ளை முயல் குட்டி நீ.
காதல் சந்தையில் நீ ஒரு தலைசிறந்த வர்த்தகர்.
நான் உன் காதலை கடனாக கேட்டேன்.. ஆனால் நீயோ பேரம் பேசி என்னை முழுவதுமாக வாங்கி விட்டாய்..
கடைசியாக இரண்டு பொக்கிஷங்களும் நமக்குள் பரிமாறப்பட்டது..
நான் இப்போது உன்னுடையவள். உன் இதயம் என்னுடையது..
Your charm hits harder than caffeine.
One glance and I’m wide awake for the day.
Forget coffee..
You’re the reason, my heart brews nonstop.
Our love is my favorite song..
When the world goes quiet,
your heartbeat becomes my music..
Missing you silently hurts
more than words can say..
Some pains are meant
to be felt,not spoken..
Do you think I am asking you for beauty tips irrelevant?
Because,
You have made my life beautiful.
Won’t you make me beautiful?
That’s why…
என்னை அருகினில் வரச் சொல்லும் போதெல்லாம் நீ என் கண்களில் துப்பறிய வர சொல்கிறாயோ என்ற பயத்தில் என் கண்களின் இமைச் சிப்பிகள் முக்கால் பாகம் மூடி விடுகிறது.
பின்னே? என் கருவிழிச் சிப்பிக்குள் ஒளிந்து, ஒளிர்ந்து கொண்டிருப்பது என் செம்பவள முத்தான நீயல்லவோ?
நெருங்கி வரச் செய்து என் கண்களை நெருக்கத்தில் பார்த்து விடாதே. உனக்கே உன்னால் கண் பட்டு விடப் போகிறது.
இன்னும் நான் உன்னை நம்புகிறேன்..
என்றாவது ஒரு நாள், எங்காவது ஒரு தருணத்தில் உன்னைச் சுற்றி அலைந்து திரியும் என் ஆவியின் கரம் பற்றி “பேசாமல் இவளைக் காதலித்திருக்கலாமோ” என்று பெருமூச்சு விட்டபடி யோசிப்பாய் என இன்னும் நான் உன்னை நம்புகிறேன்..
வெறும் கைகளால் சூரியனை மறைக்க முடியாது என்பதை உன்னால் தான் தெரிந்து கொண்டேன்.
நன்றி.
நீ சிரிக்கும் போது கைகளால் உன் முகத்தை மூடியதற்கு..
Every time you ask me to come closer,
My eyelids close three-quarters like an oyster,
Because of fearing you will detect my eyes.
Isn’t it you only, my pearl, who hides and shines within the pupil of my eye?
Don’t make me come closer and examine my eyes closely.
You yourself will be captivated by your own reflection.
Without your smile with sparkling white teeth by my side,
How can my life have a bright future?
Even though I am not your queen,
You are my glamorous king..
It was only because of you that I learned that the sun’s radiance cannot be covered with bare hands..
Thank you for covering your face with your hands when you laugh....